காசாவை ஆட்சி செய்யத் தயார் என்கிறார் அப்பாஸ், ஹமாஸ் எனன செய்யப் போகிறது..?
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தனது முதல் அறிக்கையில், போருக்குப் பிந்தைய காசாவில் "முழுப் பொறுப்பையும்" ஏற்க பாலஸ்தீனிய அதிகாரம் (PA) தயாராக உள்ளது என்று மஹ்மூத் அப்பாஸ் கூறியுள்ளார்.
"ஜனாதிபதி அப்பாஸின் உத்தரவுகளின் கீழ் பாலஸ்தீனிய அரசாங்கம், காஸாவில் முழுப் பொறுப்பையும் ஏற்கும் அனைத்துத் தயாரிப்புகளையும் முடித்துள்ளது" என்று வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை அறிவித்தது.
அந்தப் பொறுப்புகளில் இடம்பெயர்ந்தவர்கள் காஸாவிலுள்ள அவர்களது வீடுகளுக்குத் திரும்புதல், அடிப்படைச் சேவைகளை வழங்குதல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை நிர்வகித்தல் மற்றும் புனரமைத்தல் ஆகியவை அடங்கும்.
பாலஸ்தீனிய Wafa செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை, "உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும்" என்ற அப்பாஸின் அரசாங்கத்தின் அழைப்பையும் மீண்டும் வலியுறுத்தியது.
2007 ஆம் ஆண்டு முதல் காசாவில் ஹமாஸ் முழுக் கட்டுப்பாட்டை வைத்திருந்தாலும், பல தசாப்தங்களாக இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை ஃபத்தா இயக்கத்தின் ஆதிக்கத்தில் உள்ள PA இயக்குகிறது.

Post a Comment