Header Ads



குர்ஆனை எரித்தவன் சுவீடனில் சுட்டுக்கொலை, உடல் முழுவதும் துப்பாக்கித் தோட்டாக்கள்


2023 இல் இருந்து, குர்ஆனை எரித்து வந்தவன், முஸ்லிம் உலகின் எதிர்ப்பை சம்பாதித்திருந்தவன் சுவீடனின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


ஈராக் நாட்டைச் சேர்ந்த சல்வான் மோமிகாவின் உடல், பல தோட்டாக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


இறக்கும் போது அவனுகக்கு வயது 38.


வியாழனன்று ஈராக் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரகர் ஒருவர் குரானை எரித்தது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஐந்து பேரை, ஸ்வீடன் போலீசார் கைது செய்தனர்.


ஈராக் அகதியான சல்வான் மோமிகா, 38, புதன்கிழமை ஸ்டாக்ஹோமுக்கு அருகிலுள்ள சோடெர்டால்ஜி நகரில் உள்ள ஒரு வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ஐவரும் கைது செய்யப்பட்டனர், 


கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிதாரி உள்ளாரா என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை.


குறித்த சம்பவத்திற்கு ஸ்வீடனின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.