Header Ads



சிறுமியை கட்டி வைத்து கொள்ளை


கம்பஹாவில் வீடொன்றுக்குள் புகுந்து பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எண்டேரமுல்ல, பாதிலியாத்துடுய பகுதியில் நேற்று இரவு வீடொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


பல வீடுகளில் கொள்ளையிட்ட இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபருக்கு 21 வயது எனவும் பெண் சந்தேக நபருக்கு 20 வயது எனவும் தெரியவந்துள்ளது.


சந்தேக நபர்கள் களனி பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் வெளியே சென்றிருந்த போது அவர்களின் மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.


இதன்போது, சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து, மகளின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து, அவரை மிரட்டி, கயிற்றால் கட்டி வைத்தது விட்டு வீட்டிலிருந்து தங்க நகைகளைத் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


எனினும் திருட்டு இடம்பெற்ற சில மணித்தியாலங்களுக்கு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட தம்பதியிடம் திருடப்பட்ட பல தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.