இந்த ஆட்சியை கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகளைவிட, ஆட்சியை தக்கவைக்க பலமடங்கு முயற்சிக்க வேண்டியிருக்கும்
இலகுவில் ஆட்சியை கைவிடப் போவதில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மிகவும் சிரமப்பட்டு இந்த ஆட்சியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெலியத்த பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யோஷிதவை கைது செய்வது தொடர்பில் நேற்று முன்தினம் பேசப்பட்டதாகவும் இந்த விடயத்தை தாம் வெளியே சொல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யோஷிதவை கைது செய்வது போதுமானதல்ல என தற்பொழுது விமர்சனங்கள் வெளியிடப்படும் மற்றுமொருவரை கைது செய்யுமாறு கோரப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா போன்று நடந்து கொள்ள முடியாது சரியான முறையில் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு மாத காலத்தில் எம்மால் இவர்களை கைது செய்ய முடியாவிட்டாலும் இதனை கைவிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியை கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை விடவும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல மடங்கு முயற்சிக்க வேண்டியிருக்கும் என அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
Post a Comment