Header Ads



கேரள ஜம்இயத்துல் உலமாவின் தலைவர் முஹம்மது மதனீ வஃபாத் ஆனார்.


கேரள ஜம்இயத்துல் உலமாவின் தலைவரும், கேரள நத்வதுல் முஜாஹிதீன் (KNM) பொதுச்செயலாளருமான
எம்.முஹம்மது மதனீ வஃபாத் ஆனார்.

கேரள மாநிலத்தில் தலைசிறந்த மார்க்க அறிஞர்களில் ஒருவரான முஹம்மது மதனீ அவர்கள் சிறந்த எழுத்தாளரும் மார்க்க பிரச்சாரகரும், இஸ்லாமிய சமூகம் சார்ந்த பல்வேறு தளங்களில் பணியாற்றியவர்.

கேரள மாநில ஹிலால் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்துள்ள முஹம்மது மதனீ அவர்கள் நீண்டகாலம் கோழிக்கோடு கலீபா மஸ்ஜித் இமாமாகவும் பணியாற்றியவர்.

புளிக்கல் மதீனத்துல் உலூம் மதரஸா, எடவண்ண ஜாமிஆ நத்வியா அரபிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய போது இவர் உருவாக்கிய மாணவர்கள் தற்போது உலகின் பல பகுதிகளிலும் மார்க்க பணியாற்றி வருகின்றார்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் இம்மையின் நல்லறங்களை அங்கீகரித்து உயர்ந்த சுவனத்தை நிரந்தரமாக்குவானாக
Colachel Azheem

No comments

Powered by Blogger.