Header Ads



உங்களைப் பார்க்கும் வரை...

அழைக்கப்படாமலேயே நீங்கள் பலமுறை செல்லக்கூடிய ஒரே இல்லம் இது.  கதவைத் திறந்து கொண்டு எவ்வித தயக்கமின்றி உள்ளே செல்லக்கூடிய ஒரே இல்லம். உங்களைப்  பார்க்கும் வரை வாசலையே பார்க்கும் அன்பான கண்கள் கொண்ட இல்லம். 


உங்கள் குழந்தைப் பருவத்தில்  நீங்கள் பெற்ற குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் நினைவுபடுத்தும் இல்லம். நீங்கள் அங்கு செல்வதற்கும்  உங்கள் தாய்  தந்தையைப் பார்ப்பதற்கும்   அவர்களுடன் நீங்கள் அன்புடன் பேசுவதற்கும் இறைவனின்  வெகுமதியைப் பெற்றுத் தரும் இல்லம்.


நீங்கள் அங்கு செல்லாவிட்டால், அங்கு வசிப்பவர்களின் இதயம் உடைந்து விடும், நீங்கள் அவர்களுக்கு தீங்கு செய்தால், நீங்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்.


உங்களுக்காக  உங்கள் உலகத்தை ஒளிரச் செய்வதற்காக உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்க இரண்டு மெழுகுவர்த்திகள் எரியும் இல்லம். உணவு விரிப்பு முற்றிலும் உங்களுக்கானது அதில் எவ்வித பாசாங்குத்தனமும் இல்லாத இல்லம்.


 உண்ணும் நேரம் வந்தும், நீங்கள் உண்ணாமல் போனால் நெஞ்சம் நொறுங்கிப் போகும்  இல்லம்.   எப்பொழுதும் சிரிப்பையும், மகிழ்ச்சியையும்  உங்களுக்கு வழங்கும் இல்லம்.  தாமதமாகும் முன் இந்த இல்லத்தின் மதிப்பை அறிந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


-அரபு இணையதளத்திலிருந்து -

முஹம்மதுஇஸ்மாயில்நாஜிபாஜில்மன்பயி

No comments

Powered by Blogger.