Header Ads



யோஷிதவிடம் இருந்த 7 துப்பாக்கிகளில், 5 கைப்பற்றப்பட்டன


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோத்தா தெரிவித்தார்.


பாதுகாப்பு அமைச்சில், புதன்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் துப்பாக்கிகளில் இருந்து 182  துப்பாக்கிகள் மட்டுமே மீள பெறப்பட உள்ளதாக தெரிவித்தார்.


யோஷித ராஜபக்ஷவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாகவும், வேறு எந்த துப்பாக்கியும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.