ஜனாஸா எரிப்பு - Dr அணிலின் நியமனம் பற்றி முஜிபுரின் அதிரடி கேள்வி - பிமலின் காத்திரமான பதில்
- Siva Ramasamy -
கொரோனா தொற்றுக்குள்ளான உடல்களை எரிப்பது என்பது அரசியல் தீர்மானம் அல்ல சுகாதார அமைச்சின் தீர்மானம் என்று டாக்டர் அனில் ஜாசிங்க அப்போது என்னிடம் தெரிவித்திருந்தார். அப்படியான ஒருவரை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமித்திருப்பது சரியா?
பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார் முஜிபுர் ரஹ்மான் எம்.பி.
அப்படி எரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் கூட இல்லாமை கவலைக்குரியது என்றார் ரவூப் ஹக்கீம்..
அன்றைய அரசியல் கலாசாரத்தின்படி அரச அதிகாரிகள் அப்படி நடந்துகொண்டாலும் , தற்போதைய ஆட்சி அப்படியான எவற்றையும் அனுமதிக்காதென்று பிரதமர் ஹரிணி சபையில் உறுதியளித்தார்.
அப்படி எரிக்கப்பட்ட உடல்களுக்கு நட்டஈடு வழங்குவது கூட ஏற்புடையதல்ல. அந்த வேதனையினை பணத்தால் மதிப்பிட முடியாதென கூறினார் சபை முதல்வர் பிமல்.
--

Post a Comment