Header Ads



தலைவராக சஜித், பிரதித் தலைவராக ருவன், செயலாளராக இம்தியாஸ், தேசிய அமைப்பாளர் நவீன், பொருளாலராக ஹர்ஷ, ஆலோசகராக ரணில்..?


நாட்டில் ஏற்பட்ட அண்மைய அரசியல் மாற்றம்,  மக்கள் மத்தியில் இருக்கும் வெறுப்பு அரசியல் போக்கும் மத்தியில் நாடு வீழ்ந்திருக்கும் நிலையில் இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் தேவைப்பாடு வெகுவாக உணரப்பட்டு வருகிறது. குறிப்பாக உலகலாவிய பொருளாதார மற்றும் அரசியல் போக்குகளுக்கு மத்தியில் பாதகமான சர்வதேச தலையீடுகளை சாதூரியமாக கையாள்வதற்கும், நாடாக இலங்கையின் முன்னேற்றத்தையும் கருத்திற் கொண்டு வலதுசாரி அரசியல் தரப்பைச் சேர்ந்த சகல கட்சிகளும் இணைவதற்கான பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. 


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 


கட்சியின் தலைமைப் பதவி மற்றும் மொட்டு கட்சியில் இருந்து பிரிந்து வந்தவர்களுக்கும் வேட்புமனு வழங்க வேண்டும் என்ற விடயங்களை வைத்து இறுதி தறுவாயில் இது கைகூடாது தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியாகவும், சிலிண்டர் சின்னத்தில் புதிய ஜனநாயக முன்னணியிலும், யானை சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியுமாக பேட்டியிட்டன. 


இந்த பின்னனியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவிற்கு வழங்கும் பட்சத்தில் இணைவது குறித்த இணங்க தயார் என்று ஹர்ஷன ராஜகருணா, ஹேஷா விதானகே போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஊடக சந்திப்புகளில் தெரிவித்திருந்தனர். 


கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராக ரணில் விக்ரமசிங்கவையும், முன்னணித் தலைவராக சஜித் பிரேமதாசவையும், பிரதித் தலைவராக ருவன் விஜயவர்தனவையும், பொதுச் செயலாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்காரையும், தேசிய அமைப்பாளராக நவீன் திசாநாயக்கவையும், பொருளாலராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவையும் நியமிக்க இரு தரப்பினராலும் யோசனை முன்வைக்கப்பட்டு பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அறியக் கிடைக்கிறது. 


கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளில் சஜித் தரப்பு விட்டுக் கொடுப்பதாக இல்லை போலும். இரு கட்சிகளிலும் மக்கள் செல்வாக்கும் வாக்கு வங்கியும் சஜித் தரப்பிடம் இருப்பதாலே இந்த நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. 


தயாசிறி ஜயசேகர (கட்சியில் இணையும் பட்சத்தில்)  மற்றும் ரோஹிணி கவிரத்ன ஆகியோருக்கும்,  தேசிய மட்ட பதவிகள் வழங்கப்பட பெரிதும் வாய்ப்புள்ளதாகவும், பலமான இரண்டாம் மட்ட தலைவர்களை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன. 


தொழிற்சங்களை பலமாக புணரமைத்தல், இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு, புலம்பெயர் இலங்கையர்கள் அமைப்பு, புலம்பெயர் புத்திஜீவிகள் அமைப்பு, பல்கலைக்கழ விரிவுரையாளர் அமைப்புகளை பலப்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. 


(ஞாயிறு சிங்கள பத்திரிகைகளின் வாராந்த அரசியல் பக்க தகவல்களை கொண்டு எழுதப்பட்டதாகும்)

No comments

Powered by Blogger.