இணைபிரியாத மாணவத் தோழியர், ஜனாஸாவாக வீட்டுக்கு வந்த சோகம்
ஆயிஷா, ரிதா பாத்திமா, இர்ஃபானா, நிதா பாத்திமா
பாலக்காடு மாவட்டத்தில் கரிம்ப அரசு மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிகள் நால்வரும் இணைபிரியாத தோழியர்,
வீட்டிலிருந்து பள்ளிக்கு சேர்ந்து வருபவர்கள் வகுப்பிலும் பள்ளி வளாகத்திலும் ஒன்றாகவே சுற்றி வரும் கலகலப்பான மாணவிகள்.
12.12.2024 மாலை அரையாண்டு தேர்வு எழுதியவர்கள் வீட்டுக்கு ஒன்றாகவே பள்ளிக்கூடத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் கிளம்பி சென்றவர்கள் சிறிது தூரத்திலேயே ரோட்டில் ஓட்டுநர் கட்டுப்பாடு இழந்த லாரி கவிழ்ந்து நான்கு பேரும் லாரிக்கு அடியில் சிக்கி வஃபாத் ஆன சோகம்.
காலையில் தலைவாரி, பூச்சூடி உச்சி முகர்ந்து அனுப்பி வைத்த பிள்ளைகள் மாலையில் போஸ்ட்மார்ட்டம் முடிந்து ஜனாஸாவாக வீட்டுக்கு கொண்டு வரும் பெரும் சோகத்தில் உற்றாரும் உறவினரும் உடன் பயில்பவர்களும். இதுபோன்ற அசாதாரண இடர்களை விட்டு எல்லோரையும் இறைவன் பாதுகாப்பானாக...🤲
நான்கு பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் வழங்குவானாக....
Colachel Azheem

Post a Comment