மகிந்த மீது ஆளில்லா விமான தாக்குதலுக்கு, திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியவரிடம் விசாரணை - சுனில் வட்டகல
அரச புலனாய்வுத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஆளில்லா விமானம் தாக்கும் அபாயம் இல்லை என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (26) தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆளில்லா விமான தாக்குதல் ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக மனோஜ் கமகே கூறியிருந்தார். இப்போது அவரை விசாரிக்க காவல்துறை மா அதிபர் தயாராக உள்ளார்.
ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தப்பட்டாலும், அந்த ஆளில்லா விமானத் தாக்குதலை எதிர்கொள்ள, மகிந்தவைச் சுற்றியுள்ளவர்கள் போதாது. T56 அந்த ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஏற்றதல்ல.
மனோஜ் கமகே எதையாவது சொல்லும் போது கவனமாக சொல்லுங்கள், மக்களை திசை திருப்பாதீர்கள், எங்கள் உளவுத்துறைக்குள் ட்ரோன் தாக்குதல் எதுவும் இல்லை. அது எங்கிருந்து வருகிறது என்பதை அவர் சொல்ல வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டிற்குள் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லை என்றால், நாங்கள் மறுபரிசீலனை செய்வோம். நான் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர், நானும் இன்று தனியாகத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.” என தெரிவித்தார்.
Post a Comment