Header Ads



பலஸ்தீன குழந்தை மீது, டுபாய் இளவரசருக்கு ஏற்பட்ட பரிதாபம்


கடந்த 13 மாத காலமாக காசா தொடர் தாக்குதலில் 45,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.


உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளும் என ஐநா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் கை கால்களை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவன் முகமது சயீத் ஷபான்.


இந்த ஏழு வயதான சிறுவன் தனது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தான்.


சயீத்தின் கதை சமூக ஊடகங்களில் வைரலானது. அவன் பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் காணொளி சமூக ஊடகங்களில் பரவின.


இது துபாய்(dubai) நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது கவனத்துக்கு சென்றுள்ளது. பாலஸ்தீன சிறுவன் முகமது சயீத் ஷபானுக்கு செயற்கை உறுப்புக்கள் வழங்குவதாக அவர் தற்போது உறுதி அளித்துள்ளார். 

No comments

Powered by Blogger.