Header Ads



ஓடும் வேனின் சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்


ஓடும் வேனின் பின்பக்க வலது பக்க சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கண்டி குருநாகல் வீதியில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதாரகம பகுதியில் நேற்று (26) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


கண்டியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வேனின் பின்பக்க வலது பக்க சக்கரம் கழன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதியுடன் பின் இருக்கையில் இருந்த மூவரும், வேனின் சாரதியும் பலத்த காயமடைந்து மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரே உயிரிழந்தார்.


இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, தொடவெல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.


சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.