வீட்டில் தந்தை பற்றிய நினைவுகளின் உயிரோட்டம்
தனது கணவர் வபாஃத் ஆகிய பின்னரும் சுமார் எட்டு வருடங்கள் அவரது ஆடையை அவரது அலமாரியில் தொங்க விட்டு தினமும் அதில் காசை போட்டு வைப்பாள்.
பிள்ளைகள் காசு கேட்கும் போதெல்லாம் தந்தையின் பாக்கட்டில் இருந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவாள்.
வீட்டில் தந்தை பற்றிய நினைவுகள் உயிரோட்டமாக இருக்க வேண்டும், பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும் வரை தந்தையின் அர்பணிப்புகளை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதே அவளது எண்ணமாக இருந்தது.
பாதுகாப்பு பற்றிய உனது உணர்வு எப்படி இருக்கிறது என்று ஒரு ஆசிரியர் மாணவனிடம் கேட்க.
வீட்டு வாசற்படியில் தந்தையின் பாதணி இருந்தால் பாதுகாப்பாக இருப்பதனை உணர்கிறேன் என்றான் மாணவன்.
தாய் பிள்ளைகளை வயிற்றிலும் தோளிலும் சுமக்கிறாள், தந்தை தாயையும் பிள்ளைகளையும் தன் இதயத்தில் சுமக்கிறான்!
-Inamullah Masihudeen-

Post a Comment