Header Ads



களு கங்கையில் பாத்திரங்களை கழுவச்சென்றவரை முதலை இழுத்துச் சென்றது


களு கங்கையில் பாத்திரங்களை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தொடங்கொட கொஹொலான வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே முதலையை இழுத்துச் சென்றுள்ளது.


களுத்துறை கொஹொலான பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் குறித்த பெண் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


களுகங்கையில் படகுகள் மூலம் பிரதேச மக்கள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பின்னரே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.