நன்னடத்தையும், ஆலிவ் மரமும்
ரோஜாச் செடியும் வாழ்வும் ஒன்றே...
அதில் ஒவ்வொரு பூவும் பொய்யானது...
ஒவ்வொரு முள்ளும் மெய்யானது...
நீங்கள் நினைத்தால் யாரையும் நேசித்து விடலாம்...
ஆனால் உங்களை நேசிக்கும்படி யாரையும் வற்புறுத்த முடியாது.
நீங்கள் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால்
உங்கள் நெஞ்சிலிருந்து வஞ்சகத்தை அகற்றிவிடுங்கள்...
பச்சாதாபம்தான் தார்மீக வாழ்வின்
அடித்தளம்...
வாய்மைதான் புரிந்துணர்வுக்கான அடிநாதம்...
நன்னடத்தை என்பது ஆலிவ் மரம் போன்றது. அது விரைவாக வளராது, ஆனால் அது நீண்ட காலம் உயிர் வாழும்.
ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான ஆலிவ் மரம் - பெத்லகேம்
✍ தமிழாக்கம் / imran farook

Post a Comment