அநுரகுமார நாடாளுமன்றை தூய்மையானதாக மாற்றுவதாக கூறியபோதிலும் சிலர் எதிராக செயற்படுகிறார்கள்
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை ஏமாற்றியுள்ளதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போலி கல்வித் தகவல்களை வெளிப்படுத்திய அசோக ரன்வல பதவி விலகியமை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
கல்வித் தகமை குறித்து போலியான தகவல்களை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றை தூய்மையானதாக மாற்றுவதாக கூறிய போதிலும் அவரது கொள்கைகளுக்கு எதிராக கட்சியின் சிலர் செயற்பட்டு வருவது கவலையளிப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தமது கல்வித் தகமை குறித்து போலியான விபரங்களை வெளியிட்டவர்கள் இவ்வாறு கொள்கைக்கு விரோதமாக செயற்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Post a Comment