Header Ads



சர்ச்சைக்குரிய மத போதகர், விடயத்தில் விழிப்புடன் இருக்க வலியுறுத்து


சர்ச்சைக்குரிய மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில்  இலங்கை கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஜெரோம் கத்தோலிக்க பேராயர் சம்மேளனத்தின் உறுப்பினர் அல்ல என தெரிவித்துள்ளது.


சில செய்தித் தாள்களில் பேராயர் ஜெரோம் என குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், எனினும் மத போதகர் ஜெரோம் ஓர் கத்தோலிக்க பேராயர் கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.


கத்தோலிக்க மத பக்தர்கள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் இவ்வாறான விடயங்களில் ஏமாந்து விடக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கத்தோலிக்க பேராயர் சம்மேளனத்தின் செயலாளர் ஜே.டி. அன்தனி ஜயகொடி அருட்தந்தையின் கையொப்பத்துடன் கூடிய கடிதமொன்று இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.