Header Ads



அமைச்சரின் கலாநிதிப்பட்டம் நீக்கம், விபரங்கள் சரியானதா என உறுதிப்படுத்த உத்தரவு


நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஆளும் கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது.


நீதி அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன நாணயக்காரவின் பெயரின் முன்னால் எழுதப்பட்டிருந்த கலாநிதி என்ற பட்டம் தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.


அவைத் தலைவர் காரியாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் தகவல்களின் அடிப்படையில் நாடாளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் ஹர்ஷனவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.


எனினும், அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் கலாநிதி பட்டம் தொடர்பில் கடிதம் வழங்கியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, நாடாளுமன்ற இணையத்தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் சரியான முறையில் எழுதப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள பூரண ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இணையத்தளத்தில் பிழையாக எழுதப்பட்டிருந்த சில விபரங்கள் திருத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.