வெறிச்சோடிய காணிக்கு அருகில், கைவிடப்பட்ட வெள்ளைக் கார் மீட்பு
தங்காலை வீரக்கெட்டிய வீதியில் பதிகம மரகஸ் சந்தியிலிருந்து திரவல வரையான பக்க வீதியில் வெறிச்சோடிய காணிக்கு அருகில் வியாழக்கிழமை (12) இரவு வெள்ளை நிற கார் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீரக்கெட்டிய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் நுவான் விஜேதுங்கவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, உரிமையாளர் இல்லாத இந்த சந்தேகத்திற்கிடமான கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார், கடவத்தை, விஜயபா மாவத்தை, மேல் கரகஹமுன, என்ற இடத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment