Header Ads



பல மில்லியன் ரூபாய் பெறுமதியான, முன்னாள் அமைச்சரின் வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சுமார் 20 மில்லியன் ரூபாய் சேமிப்புடனான நடப்புக் கணக்கு மற்றும் நிலையான வைப்புக் கணக்கு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.


ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்பாக இரண்டு கணக்குகளும் ஏழு நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இடைநிறுத்தம் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதற்கு முன்னர், ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் ஏனைய உறவினர்களுக்குச் சொந்தமான பல சொத்துக்கள் தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாக முடக்கப்பட்டன.


ஜூலை 5, 2024 அன்று, ரம்புக்வெல்லவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் ஆகியோரின் பெயரில் இருந்த 97.125 மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க தனியார் வங்கி சேமிப்புகள் , ஆயுள் காப்புறுதிக் கொள்கைகள் நிலையான வைப்பு மற்றும் காப்பீட்டுக் கொள்கைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்தது.


இந்த உத்தரவு பின்னர் ஜனவரி 4, 2025 வரை நீட்டிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.