Header Ads



நீர்கொழும்பு - கொழும்பு வீதியை, பாவிப்பவர்களின் கவனத்திற்கு


நாளை (14ஆம் திகதி) இரவு 7 மணி முதல் நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


வத்தளை பொலிஸ் பிரிவில் உள்ள ஹெந்தல புராண ரஜமஹா விகாரையின் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி பெரஹர நாளை (14) இரவு 7 மணி முதல் மறுநாள் (15) காலை வரை நடைபெறவுள்ளதால், அந்த நேரத்தில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.


ஹெந்தல புராண ரஜமஹா விகாரையிலிருந்து ஆரம்பமாகி ஹெந்தல வீதியூடாக ஹெந்தல சந்தி வரை பயணித்து கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் ஊடாக பழைய நீர்க்கொழும்பு வீதி ஊடாக பயணித்து  மீண்டும் கொழும்பு நீர்க்கொழும்பு பிரதான வீதிக்கு பிரவேசித்து அல்விஸ் டவுன், ஹெந்தல சந்தி ஊடாக மீண்டும் விகாரைக்கு செல்லவுள்ளது. 


சாரதிகளின் வசதிக்காக பொலிஸாரால் குறிப்பிடப்பட்ட மாற்று வீதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.