Header Ads



எருமைகளும், இளைஞர்களும் மோதல் - 5 பேர் காயம், எருமை உயிரிழப்பு


மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த விபத்துச் சம்பவம்  கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - பாசிக்குடா பிரதான வீதியில் வியாழக்கிழமை (05) இரவு  இடம்பெற்றுள்ளது.


மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஐந்து பேர் அதிவேகமாக பயணித்த போது வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதியுள்ளனர்.


இதில், ஒரு எருமை உயிரிழந்துள்ளதுடன், நான்கு எருமைகள் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஐந்து இளைஞர்களும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பின்னர், ஐந்து இளைஞர்ளும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளனர்.


இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



- எச்.எம்.எம்.பர்ஸான் -

No comments

Powered by Blogger.