5 மில்லியன் ரூபா மதிப்புள்ள அழகுசாதனப் பொருட்களைக் கடத்த முயன்றபோது கைது
மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குறித்த சந்தேகநபர், விமான நிலைய வருகை ஓய்வறையில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அடிக்கடி பயணம் செய்பவர் மற்றும் வர்த்தகர் எனவும், அவர் இந்தியாவின் மும்பையில் இருந்து நாட்டிற்கு வந்துள்ளதாகவும் சுங்க விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது பொருட்களில் அழகுசாதனப் பொருட்கள் நிரம்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment