Header Ads



குளிரூட்டியை லஞ்சமாக பெற்ற, பொலிஸ் பொறுப்பதிகாரி கைது


- இஸ்மதுல் றஹுமான் -


குளிரூட்டி ஒன்றை லஞ்சமாக பெற்ற நீர்கொழும்பு பிராந்திய மோசடி விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரியை  கொழும்பு  லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைப் பணியகம் அதிகாரிகள் கைது செய்தனர்.


 இது தொடர்பாக தெரியவருவதாவது, 


வாடகைக்கு பெற்றுக்கொண்ட  கார் வண்டியை ஈடு வைத்ததனால்  ஏற்பட்ட பிணக்கு தொடர்பாக நீர்கொழும்பு மோசடி விசாரணை பிரிவில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.     இம் முறைப்பாட்டை விசாரணை செய்வதற்கும் நீதிமன்றத்தில் இருந்து காரை விடுவித்துக் கொடுப்பதற்காகவும் லஞ்சமாக குளிரூட்டி (எயாகெண்டிஷன்) ஒன்றைக் கோரியுள்ளார். 


இதற்காக குளிரூட்டியின் பெறுமதியான 2 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவை குறித்த விற்பனை நிலைய முகாமையாளரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுமாறு கூறியுள்ளார். 


இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைப் பணியக அதிகாரிகள் நீர்கொழும்பு பிராந்திய மோசடி விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் முனசிங்க ஹேவா ரோஹன அஜீத் குமாரவை நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளவில் வைத்து 29ம் திகதி  கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட பொறுப்பதிகாரியை விசாரணையின் பின்னர் நீர்கொழும்பு பதில் நீதவான குணதாஸ முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது எதிர் வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் கைக்குமாறு உத்தரவிட்டார்.


No comments

Powered by Blogger.