Header Ads



ரஷ்ய இராணுவத்தில் இணைந்தவர்களை மீட்டுத்தரும்படி கோரி ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம்


ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட தமது உறவினர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருமாறுக்கோரி உறவினர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் நேற்றைய தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


தற்பொழுது தங்களது உறவினர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடையாது எனவும், அவர்களின் சம்பளங்களும் தமக்கு கிடைக்கப்பெறுவதில்லை எனவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இதனால் குடும்ப செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுளள்னர். 


கடந்த அரசாங்கத்திடம் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.