1924 இல் பிறந்த மெணிக்ஹாமி, 100 வது பிறந்தநாளை கொண்டாடினார்
கொட்டுக்கச்சியவைச் சேர்ந்த மெணிக்ஹாமி என்பவர், தனது பிள்ளைகள், பேரக்குழந்தைகளுடன் இணைந்து, தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
1924ஆம் ஆண்டு பிறந்த மெணிக்ஹாமியின் சொந்த ஊர் மஹகும்புக்கடவல, சொஹொன்கல்ம்ப எனும் கிராமம் என்பதுடன், அவர் கொட்டுக்கச்சியை சேர்ந்த ஏ.எம். பண்டாப்பு என்பவரை திருமணம் செய்து கொண்டு நூறு ஆண்டுகள் வாழ்ந்த பெருமையைப் பெற்றுள்ளார்.
அவரது அன்புக் கணவன், ஒரு சில வருடங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார்.
பதினோரு பிள்ளைகளைப் பெற்றெடுத்த அவர், அந்த பதினொரு குழந்தைகளையும் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்த்து, சமுதாயத்திற்கு ஒரு நல்ல தலைமுறையைக் கொடுக்க எடுத்த முயற்சி பாராட்டுக்குரியதாகும்.
பதினொரு குழந்தைகளின் தாயான மெணிக்ஹாமிக்கு 24 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
பதினோரு பிள்ளைகளுக்கு அன்பைக் கொடுத்த இந்தத் தாய்க்கு அவருடைய பிள்ளைகள் வைத்திருக்கும் அன்பு வியக்கத்தக்கது.
வயதான பெற்றோரை வீதியோரத்தில் விட்டுச் செல்லும் குழந்தைகள் இருக்கும் நாட்டில், தாய் மெனிக்ஹாமியின் பிள்ளைகள் தங்கள் தாயை மிகவும் அன்புடன் கவனித்து உண்மையான குழந்தைகளாக தங்கள் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.
தன் நூறு வயது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வந்து வாழ்த்தியமை தொடர்பில் மேலும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவிக்கின்றார்.
Post a Comment