மிரட்டல் விடுத்துள்ள ஆணையாளர்
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது. இன்று (04) ஆரம்பமாகும் தபால் மூல வாக்குப்பதிவு, வௌ்ளிக்கிழமை (06) நிறைவடையும். இந்நிலையில், தேர்தல் செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
நாட்டின் அனைத்து ஊடக நிறுவனங்களும் தேர்தல் சட்டத்திற்கு அமைவாக நடுநிலையுடன் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சில ஊடக நிறுவனங்கள் சில எதிர்பார்ப்புகளை ஊக்குவிப்பதாக ஆணைக்குழுவுக்கு தொடர்ந்து முறைப்பாடு கிடைக்கிறது என அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.பி. ரத்நாயக்க கூறுகிறார்.
இது தொடர்பில் நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவுறுத்தல்களின்படி செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அந்த நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் வெளியிடும் அறிவிப்புகள் அப்பப்படாது என்றும், அவ்வாறான நிறுவனங்களுக்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Post a Comment