பொய்யான அறிக்கை - சாகர தேரரிடம் 500 மில்லியன் நட்டஈடு கேட்கும் மனுஷ
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை பற்றிய பொய்யான அறிக்கையொன்றை வெளியிட்ட பஹியங்கல ஆனந்த சாகர தேரருக்கு எதிராக முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
ஆதாரமற்ற அறிக்கையினை வெளியிட்டமாயினால் தமது நற்பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்துக்கு 500 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு மனுஷ நாணயக்கார தனது சட்டத்தரணிகள் மூலம் ஆனந்த சாகர தேரருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை இன்று(4) அனுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் உறவினருக்கு சொந்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஆட்களை அனுப்பி பெருத்தொகையான பணத்தை அவர்கள் ஈட்டியுள்ளதாக ஆனந்த சாகர தேரர் தெரிவித்த அறிக்கையில் எந்த அடிப்படையும் இல்லை எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment