மனிதாபிமானம் கலந்த, சிறந்த முன்மாதிரி
K. S. ஹம்சா, திருச்சூர் சேர்ந்தவர். முன்னாள் முஸ்லிம் லீக் பிரமுகர்
மலபார் பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களும் நடத்தி வரும் தொழிலதிபரும் கூட.
ஆகஸ்ட் 4ம் தேதி அவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
சுமார் மூவாயிரம் பேருக்கு விருந்து உட்பட செய்திருந்த பிரமாண்ட ஏற்பாடுகள் அனைத்தையும்கேரளா - வயநாடு நிலச்சரிவு காரணமாக தவிர்த்து விட்டு, தனது வீட்டிலேயே எளிதாக இரண்டு குடும்பத்தவர் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நிக்காஹ் நாளை (04) நடைபெறுகிறது.
திருமண செலவுகளுக்காக ஒதுக்கிய தொகையை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக ஹம்சா அறிவித்துள்ளார்..
Colachel Azheem

சகோதரர் ஹம்ஸா அவர்களின் முடிவு மிகவும் சிறந்தது, இறைதிருப்தியைக் கொண்டுவருவது, அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும், திருமண தம்பதிகளுக்கும்அதன் அருள், பரக்கத், ரஹ்மத் நிச்சியம் இவ்வுலகிலும் மறுமையிலும் நிச்சியம் கிடைக்கும் , கிடைக்க நாம் அனைவரும் பிரார்ததனை செய்வோம். இதுபோன்ற மனிதாபிமான கைங்கரியங்களை நாம் தொடர வேண்டும்.
ReplyDelete