Header Ads



இலங்கையில் இப்படியொரு விலங்கு உள்ளதா..? உண்மைச் செய்தி என்ன..??


அழிந்துப் போனதாக கூறப்படும் “சிகிபில்லா” (Chikibilla) எனப்படும் விலங்கு இலங்கையில் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் முற்றிலும் போலியானவை என AFP செய்தி வெளியிட்டுள்ளது.


இலங்கையின் யால சரணாலயத்தில் 103 ஆண்டுகளுக்கு பின் சிகிபில்லா கண்டுப்பிடிக்கப்பட்டதாக அண்மையில் சமூக ஊடங்களில் படங்கள் பகிரப்பட்டன.


எவ்வாறாயினும், அவ்வாறான எந்தப் புகைப்படங்களும் பதிவுசெய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.


வனவிலங்கு நிபுணர்களும் அப்படி ஒரு உயிரினம் இலங்கையில் இல்லை என்று AFPயிடம் கூறியுள்ளனர். குறித்தப் படங்கள் டிஜிட்டல் முறையில் கையாளப்பட்டதாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யால தேசிய பூங்கா, இலங்கையின் தென்கிழக்கில் அமைந்துள்ள இயற்கையான பரந்த தேசிய பூங்காவாகும். இது பல்வேறு வகையான பாலூட்டிகள் மற்றும் பறவை இனங்களுக்கு தாயகமாக இருந்து வருகின்றது.


இந்நிலையில், மரங்கள் நிறைந்த இருண்டப் பகுதியில் நான்கு கால்களுடன் சிகிபில்லா இருப்பது போல படங்களில் காட்டப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும், “யால தேசிய பூங்காவில் இருந்து அப்படி எதுவும் பதிவாகவில்லை” என்று பூங்காவின் செய்தித் தொடர்பாளர் AFPயிடம் தெரிவித்துள்ளார்.


னவிலங்கு நிபுணர்களும் இதில் உண்மை இல்லை என்று AFPயிடம் கூறியுள்ளனர்.


“சிகிபில்லா என்ற விலங்கு இலங்கையில் இல்லை. உலகில் இப்படியொரு விலங்கு இருக்கிறதா என்பது தனக்கு சந்தேகம்” உள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விலங்கியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கனிஷ்க உகுவெல தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.