பள்ளிவாசலுக்குள் நிகழ்ந்த கொடூரம் - 11 பேர் மரணம், பலர் காயம்
நைஜீரியாவின் வடக்கு கானோ மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது ஆடவர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக அந்த மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.
அந்த ஆடவர் பள்ளிவாசல் மீது பெற்றோலை தெளித்து அதன் கதவுகளை மூடிவிட்டு தீவைத்துள்ளார். அப்போது பள்ளிலாசலுக்குள் 40 பேர் வரை சிக்கியுள்ளனர். குடும்பப் பிரச்சினை ஒன்று காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
38 வயதான அந்த ஆடவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கானோ மாநிலத்தின் கெசாவா பகுதியில் கடந்த புதனன்று (15) காலைத் தொழுகைக்காக வழிபாட்டாளர்கள் திரண்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூடிய பள்ளிவாசல் கதவை திறப்பதற்கு உள்ளே சிக்கியவர்கள் போராடிய நிலையில் தீ பள்ளிவாசல் எங்கும் பரவியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். வெடிப்புச் சத்தம் கேட்டதை அடுத்து அங்கிருக்கும் குடியிருப்பாளர் உள்ளிருப்பவர்களை காப்பற்ற விரைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a Comment