Header Ads



பாராளுமன்ற பதவியை இழப்பாரா விஜயதாச


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்ற நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என SLPP பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி இன்று தெரிவித்தார்.


இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் கலந்துரையாடவில்லை எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் விரைவில் முடிவெடுப்பார் எனவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


கட்சியின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின்படி, ஒருவர் மற்றுமொரு அரசியல் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றவுடன் அவரது கட்சி உறுப்புரிமையை விரைவில் இழக்க நேரிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.


இதனால், அமைச்சர் ராஜபக்ஷ கட்சி உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்றும், அதன் மூலம் அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.


“அமைச்சர் ராஜபக்ஷ SLPP அங்கத்துவத்தைப் பெற்று, SLPP சீட்டின் கீழ் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அவர் மற்றுமொரு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்ற குற்றத்தை அவர் செய்துள்ளார். அதனால், அவரது SLPP உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும், அதன் விளைவாக, அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்" என்றார்.

1 comment:

  1. சிரீலங்கா சுதந்திரக்கட்சியின் வீணாப்போன பா.உ. தங்கள் வசம் சேர்த்துக் கொள்ள ரணில் போட்ட சூழ்ச்சியாகத்தான் இது தெரிகிறது. அந்த சூழ்ச்சிக்கு டீல்தாஸவும் மாட்டியிருக்கின்றாரா என்பது தான் இங்கு தெரியும் விடயமாகும். ஆனால் சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் மிகப் பெரிய சூழ்ச்சிக்காரன் திரைமறைவில் இருக்கின்றான் என்பது தான் உண்மை. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.