Header Ads



அதி கூடிய விலைக்கு வடையை விற்க முயன்றவர்


வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 


குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.


மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார். 

 

அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார். 


இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

 

பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.