Header Ads



மீண்டும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது


தற்போதுள்ள வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதா அல்லது தற்போதுள்ள வங்குரோத்து நிலையிலிருந்து மேலும் வங்குரோத்து ஆவதா என்பதை இம்முறையும் மக்களே தீர்மானிக்க வேண்டும்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச


புத்தாண்டு காலத்தில், நாட்டில் பாதி பேர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். புத்தாண்டு ஆகாரங்களைக் கூட சரியாக தயார் செய்ய முடியாமல் பலர் உள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து தொழிற்சாலைகள் மூடப்படுவதால் நாட்டின் பெரும்பாலான மக்கள் கடுமையான அழுத்தத்தில் நாளாந்த வாழ்க்கையை கடத்தி வருகின்றனர். இந்நாட்டில் 50% பேர் நிர்க்கதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது எல்லாம் சரியாகிவிட்டது என்று கூறுபவர்கள் இருந்தாலும், அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த இயல்பு நிலை மக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


சகல பாடசாலை மாணவர்களையும் விடுத்து ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு மட்டும் மதிய உணவு வழங்கப்படுவது, வேலைவாய்ப்பு இன்மையை நாளைக்கு நாள் அதிகரிப்பது, வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டம் இன்மை, முதலீடு எதுவும் இன்மை என சகல வழிகளிலும் நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாலேயே வறுமை அதிகரித்து வருவதாகவும், நாட்டில் தற்போது மனிதாபிமானமற்ற அரசாங்கமே ஆட்சியில் உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 156 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 15 ஆம் திகதி இடம்பெற்றது. 


இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம், வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார். மேலும், தெரண தொலைக்காட்சி லிட்டில் ஸ்டார் போட்டியில் தேசிய மட்டத்தில் 4 ஆவது இடத்தைப் பெற்ற வெற்றியாளருக்கு  மடிக்கணினி ஒன்றையும் வழங்கி வைத்தார்.


சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்கள் சார், மனிதாபிமான உடன்படிக்கையுடன் இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிப்பதன் மூலம் அடுத்த வருட புத்தாண்டைக் கொண்டாட நடவடிக்கை எடுப்போம். ஏலவே இது தொடர்பான திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியுள்ளோம். பொருளாதாரத்தைச் சுருக்கும் தீர்வுகளுக்கு பதிலாக அனைவருக்கும் நலனையும் சௌபாக்கியத்தையும் கொண்டு வரும் பொருளாதார விரிவாக்கமே நமக்கு இங்கு தேவைப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.


2019 ஆம் ஆண்டைப்போல மீண்டும் மக்கள் ஏமாந்து விடக்கூடாது. 5 வருடங்களுக்கு முன்னர் மக்களை ஏமாற்றி இன்று நாடே வங்குரோத்து நிலைக்கு ஆளாகிவிட்டது.

தற்போதுள்ள வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதா அல்லது தற்போதுள்ள வங்குரோத்து நிலையிலிருந்து மேலும் வங்குரோத்து ஆவதா என்பதை இம்முறையும் மக்களே தீர்மானிக்க வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


குறுகிய மனப்பான்மையைக் காட்டிலும் சர்வதேச தொழிலாளர் சந்தையின் தேவைக்கேற்ப எமது பாடத்திட்டம் சீர்திருத்தப்பட்டு, மூடிய நிலையில் இருந்து பரந்த அனுகலை சாத்தியப்படுத்தும் நாடாக இலங்கை மாற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.