Header Ads



ரஷ்ய ஆயுதப் படை தளபதி இலங்கை வருகை


ரஷ்ய ஆயுதப் படையின் தரைப் படையணியின் பிரதான படைத் தளபதி மேஜர் ஜெனரல் Sviridov Vladimir உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.


ரஷ்ய ஆயுதப் படையின் தரைப் படையின் பிரதான படைத் தளபதி மேஜர் ஜெனரல் Sviridov Vladimir, பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரி  ஜெனரல்  சவேந்திர சில்வாவை நேற்று முன்தினம் (22) சந்தித்தார்.


ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த நட்புறவை இதன்போது வலியுறுத்தியதுடன்,குறித்த நட்புறவு எதிர்காலத்தின்  நீண்ட கால நட்புறவு என மேஜர் ஜெனரல் Sviridov Vladimir கூறியுள்ளார்.


Sviridov Vladimir-இன் இலங்கை விஜயம் மற்றும் அவருடனான சந்திப்பினை வரவேற்பதாக பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரி  ஜெனரல்  சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதன்போது, இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஆழமான மற்றும் வலுவான இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.