Header Ads



தாய் - தந்தையர் இறந்த பின்னும், அவர்களுக்கு பணம் ஒதுக்கும் மகன்


ஒரு நண்பரின் மாதாந்திர  செலவு பட்டியலைப்  பார்க்கும் சந்தர்ப்பம், நண்பர் ஒருவருக்குக் கிடைத்தது. அதில்   தன் தாய், தந்தைக் கென ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்டு,  "உன் தாயும் தந்தையும் தான் மரணித்துவிட்டார்களே" பின் எதற்காக அவர்களுக்கு தொகை ஒதுக்கியுள்ளாய் எனக் கேட்டார்.


அந்த நண்பர் புன்னகையுடன் சொன்னார்,  "என் தாயும் தந்தையும் இப்பூமியிலிருந்து மறைந்துவிட்டார்கள் ஆனால் என் இதயத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். இப்பூமியில் வாழ்கின்றபோது, என்ன என்னிடம் எதிர்பார்த்தார்களோ, அதைவிட அதிகமாக அவர்கள் மண்ணறையிலிருந்து  என்னிடம் எதிர்பார்க்கிறார்கள், எனவே மாதந்தோறும் அவர்களுக்கு நன்மை சென்றடையும் வகையில் சதகா- தர்மம் செய்து அவர்களின் பாவமன்னிப்புக்காக துஆ செய்து வருகிறேன் என்றார்


"பெற்றோர்கள் மரணித்து விட்டாலும், அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய நன்றிக் கடன் ஒருபோதும் மரணிக்காது"


-இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பயீ-

No comments

Powered by Blogger.