Header Ads



தீர்ப்பை கூறிவிட்டு ஞானசாரருக்கு நீதிபதி தெரிவித்த விடயம்


கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த பட்டபெதிகே இன்று(28) 4  வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.


அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 2 குற்றப்பத்திரிகைகள் இரண்டிலும் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


முதலாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் வெவ்வேறாக விதித்த நீதிபதி, இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக 50,000 ரூபா அபராதம் விதித்தார்.


தேரர் என்ற வகையில் தேசிய மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படக்கூடாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.