Header Ads



இலங்கையர் ஒருவருக்கு மாதாந்தம், எவ்வளவு பணம் தேவை..?


தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வறுமைக்கோடு தொடர்பான புதிய அட்டவணையை  வௌியிட்டுள்ளது.


இந்த புதிய அட்டவணைக்கு அமைய,  இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம்  17,014 ரூபா தேவைப்படுகின்றது.


தேசிய மட்டத்தில் இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாவட்டங்கள் தோறும் இந்த தொகையில் மாற்றம் ஏற்படுகின்றது.


கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவாக 18,350 ரூபா காணப்படுகின்றது. 


இதற்கமைய, இலங்கையிலுள்ள  25 மாவட்டங்களில் அதிக செலவினைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு அமைந்துள்ளது.


குறைந்த செலவினைக் கொண்ட மாவட்டமாக  மொனராகலை உள்ளது.


மொனராகலையில் ஒருவர் வறுமை நிலையை எட்டாமல், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு 16,268 ரூபா தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. மாதம் 18350 என்றால் ஒரு நாளைக்கு 612. சோத்துக்கே போதாது. எவன் போட்ட கணக்கிது

    ReplyDelete

Powered by Blogger.