Header Ads



வரலாற்றில் இடம்பிடித்த எம்.எச்.ஒமர் குடும்பம் - 2.5 பில்­லியன் ரூபா நன்­கொ­டை­

 


இலங்கை மக்­க­ளுக்கு உயர்­தர சுகா­தார சேவையை வழங்­கு­வதை உறுதி செய்­வ­தற்­காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்­தி­ய­சா­லையில் நிறு­வப்­பட்ட “எம். எச். ஒமர் விசேட கல்­லீரல் நோய் சிகிச்சை நிலையம்” செவ்­வாய்க்­கி­ழ­மை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் திறந்து வைக்­கப்­பட்­டது.


இந்த கல்­லீரல் நோய் விசேட சிகிச்சை நிலை­யத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­காக எம். எச். ஒமர் நிதியம் இரண்­டரை பில்­லியன் ரூபாய்­களை நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது.


இது இலங்­கையின் சுகா­தாரம் மற்றும் கல்வி சேவை­க­ளுக்கு இலங்­கையில் தொழில்­மு­னைவோர் வழங்­கிய மிகப்­பெ­ரிய நன்­கொ­டை­யாகும் .எம். எச். ஒமர் இந்த நாட்டில் புகழ்­பெற்ற பிராண்டிக்ஸ் குழு­மத்தின் ஸ்தாபகர் ஆவார்.


அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற வைப­வத்தில் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, ஒமர் குடும்­பத்­தினர் வழங்­கிய தனித்­து­வ­மான நன்­கொடை மற்றும் பிராண்டிக்ஸ் வர்த்­த­கத்தின் ஊடாக நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கு ஆற்­றிய பங்­க­ளிப்பை பாராட்­டினார்.


கல்­லீரல் மாற்று சத்­தி­ர­சி­கிச்­சை­க­ளுக்கு பிராந்­தி­யத்தில் சிறந்த நாடாக இன்று இலங்கை மாறி­யுள்­ளதை சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி, அந்த குழு நாட்­டிற்கு வழங்­கிய நற்­பெ­ய­ருக்கு நன்றி தெரி­வித்தார்.


சிசு இறப்பு மற்றும் தாய் இறப்பு விகி­தங்­களின் அடிப்­ப­டையில் நமது நாடு புள்­ளி­வி­பர அடிப்­ப­டையில் சிறந்த நிலையில் உள்­ளது என்றும், கொவிட் தொற்­றுநோய் காலத்­திலும் அதைத் தொடர்ந்து வந்த பொரு­ளா­தார நெருக்­கடி காலத்­திலும் இலங்கை வலு­வாக முன்­னேற முடிந்­த­தாக இந்­நி­கழ்வில் உரை­யாற்­றிய சுகா­தார மற்றும் கைத்­தொழில் அமைச்சர் ரமேஷ் பத்­தி­ரன தெரி­வித்தார்.கொழும்பு வடக்கு போதனா வைத்­தி­ய­சா­லையில் இந்த வச­தி­க­ளுக்­காக 2.5 பில்­லியன் ரூபா தொகையை நன்­கொ­டை­யாக வழங்­கிய எம்.எச்.ஒமர் மற்றும் குடும்­பத்­தி­ன­ருக்கு அவர் நன்­றி­களை தெரி­வித்தார்.


உயர்­கல்வி இரா­ஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், எம். எச். ஒமரின் பேரனும் பிராண்டிக்ஸ் குழு­மத்தின் பணிப்­பா­ள­ரு­மான ஹாசிப் ஓமர், உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.