Header Ads



1,700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை


(தகவல் மூலம் - T
heguardian)


இங்கிலாந்தின் பெர்ரிஃபீல்ட்ஸ் பகுதியில் 1,700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


முட்டையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, சேதமடையாத முட்டையின் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் இன்னும் இயற்கையாக முட்டையில் பாதுகாக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.


ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எட்வர்ட் பிடுல்ஃப்  இது குறித்து தெரிவிக்கையில், 1,700 ஆண்டுகளுக்குப் பிறகும் மனித தலையீடு இல்லாமல் இயற்கையாகவே மஞ்சள் கருவும் வெள்ளையும் பாதுகாக்கப்பட்ட உலகின் ஒரே முட்டை இது என்று தான் நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.