Header Ads



இலங்கையில் முதன்முறையாக வித்தியாசமான கண்டுபிடிப்பு


இலங்கையில் முதன்முறையாக, ஒளியியல் மாயையுடன் கூடிய வீதிப் பகுதியைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அதுல சேனாரத்னவின் ஆய்வின் மூலம்  ஒளியியல் மாயையுடன் கூடிய வீதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நாவுல - எலஹெர பிரதான வீதியில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இந்த வீதிப் காணப்படுகிறது.


இது தொடர்பில் முன்னாள் இராணுவ கேணல் ரத்னபிரிய பந்து காணொளி மூலம் பேராசிரியருக்கு தெரியப்படுத்தியதுடன், அவ்விடத்தை பார்வையிட வந்த பேராசிரியர், இலங்கையில் இவ்வாறானதொரு இடம் காணப்படுவது இதுவே முதல் முறை எனவும் கூறியள்ளார்.


வேறு பல நாடுகளில் இதுபோன்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இந்த இடம் பார்ப்பதற்கு மேடு போல் இருந்தாலும், உண்மையில் இது ஒரு பள்ளத்தாக்கு என பேராசிரியர் விளக்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.