ஒரே ஒரு முஸ்லிம் ஊடகவியலாளராக MJM தாஜுத்தீன் கௌரவிக்கப்பட்டார்
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (01.11.2023) நடைபெற்ற கௌரவிப்பு விழாவில், ஊடகத்துறையில், சிறந்த பணியாற்றிய 10 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பணப்பரிசும், நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
அந்தப் 10 பேரில் ஒரே ஒரு முஸ்லிம் ஊடகவியலாளராக MJM தாஜுத்தீன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்
இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 68 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழாவிலேயே அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்
விழாவில் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களை கௌரவித்தார்.



Post a Comment