Header Ads



தோல்வியே காணாத மகாசேனை


´´தோல்வியே காணாத அல்லாஹ்வின் மகாசேனை எதுவென அலி பின் அபீ தாலிப் அவர்களிடம் கேட்கப்பட்டது!


அதற்கு அவர்: நான் தினமான பொருளாக இரும்பைப் பார்த்தேன், அதுதான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன். 


பின்னர் நான் நெருப்பைப் பார்த்தேன், அது இரும்பை உருக்குவதைக் கண்டேன், அதனால் நெருப்புதான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன். 


பின்னர் நான் தண்ணீரைப் பார்த்தேன், அது நெருப்பை அணைக்கண்டேன். அதனால் தண்ணீர்தான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன்.


பின்னர் நான் மேகங்களைப் பார்த்தேன், அவைகள் தண்ணீரைச் சுமந்து செல்வதைக் கண்டேன், அதனால் மேகங்கள்தான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன். 


பின்னர் நான் காற்றைப் பார்த்தேன், அது மேகங்களை தள்ளிக்கொண்டு செல்வதைக் கண்டேன், எனவே காற்றுதான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன்.


பின்னர் நான் மலைகளைப் பார்த்தேன், அவைகள் காற்றுக்கு முகம் கொடுத்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டேன்.  எனவே மலைகள்தான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன்.


பின்னர் நான் மனிதனைப் பார்த்தேன், அவன் மலைகளை குடைந்து வீடுகள்  செதுக்குவதைக் கண்டேன், எனவே மனிதன்தான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன். 


பின்னர் நான் மனிதனை அயர வைப்பது எதுவென்று பார்த்தேன். தூக்கம் அவனை அயர வைப்பதைக் கண்டேன். அதனால் தூக்கம்தான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன்.


பின்னர் தூக்கத்தை போக்குவது எதுவென்று நான் பார்த்தேன். துக்கம் துயரம் அவனது தூக்கத்தை களைப்பதைக் கண்டேன். அதனால் துக்கம் துயரம்தான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன்.


பின்னர் நான் துக்கம் துயரம் எங்கு நிலை கொண்டுள்ளது என்று பார்த்தேன். துக்கம் துயரம் இதயத்தில் இருந்து கொண்டு ஆட்டிப்படைப்பதைக் கண்டேன். 


அதனால் இதயம்தான் அல்லாஹ்வின் மகாசேனை என்று எண்ணிக்கொண்டேன்.


பின்னர் நான் இதயம் அமைதிபெற என்ன வழி என்று தேடிப்பார்த்தேன். அல்லாஹ்வின் நினைவுகளே இதயத்தை அமைதிபெற வைக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். அதனால் அல்லாஹ்வின் நினைவுகள்தான் அல்லாஹ்வின் மகாசேனைகள் என்று உறுதியாக அறிந்து கொண்டேன். 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.