Header Ads



மரணத்திற்கு அச்சப்படாத கூட்டத்திற்கும், வாழ ஆசைப்படும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான போட்டி


 - Rosy S Nasrath -


"மரணத்திற்கு அச்சப்படாத கூட்டமல்ல நாங்கள், மரணத்திற்கு ஆசைப்படுபவர்கள்" - ஃபலஸ்தீனியர் 


இஸ்ரேல் தன்னிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் வைத்து விளையாடிவிட்டது இன்னும் நியூக்ளியர் வெப்பன் மட்டுமே கையில் உள்ளது. ஃபலஸ்தீனிகளுக்கு ஆதரவாக இரான் கூட்டணிப்படைகளும் ஹிஸ்புல்லாவும் எங்கள் (இஸ்ரேல்) மீது கடுந்தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்ரேல் தன்னை காப்பாற்றிக்கொள்ள சக்திவாய்ந்த நியூக்ளியர் ஆயுதங்களை உபயோகிக்க ஆரம்பித்தால் நிச்சயமாக எங்களுக்கும் சேர்த்தே அழிவு வரும் -- என இஸ்ரேலிய எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான யுவல் நோவா கூறியிருப்பது இஸ்ரேலியர்களிடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


தினமும் நான்கு மணிநேர போர் நிறுத்தத்தை அமல்ப்படுத்தக்கோரி பைடன் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ள நெதன்யாஹு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்ட பிறகே இந்த நியூக்ளியர் நாசத்தை நிகழ்த்துவார் என இஸ்ரேலின் எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 


இந்நிலையில் ஹமாஸ் இயக்கத்தினர் எங்கிருந்து எங்களை தாக்குகின்றனர் என்றே தெரியவில்லை பெரும்பாலும் நாங்கள் பேய்களோடு சண்டை போடுவதைப் போல எங்களுக்கு தோன்றுகிறது என இஸ்ரேலி ராணுவத்தினர் புலம்பத்தொடங்கியுள்ளனர். 


வாழ வேண்டும் என்ற ஆசை கொண்ட இஸ்ரேலியர்களுக்கு ஃபலஸ்தீனிகளை சமாளிப்பது பெரும்பாடாக இருக்கிறது.

No comments

Powered by Blogger.