Header Ads



இது போன்ற ஒரு நாளில்தான், ஐரோப்பா முழுவதும் ஒளி வீசிய ஜோதி அணைந்தது


கி பி 1248 ஆம் ஆண்டில் (நவம்பர் 23 ல்) இது போன்ற ஒரு நாளில்தான் புதுமை மிக்க ஒரு ஒரு நாகரீகத்தின் மீது காலம் அதன் திரைச்சீலை போடுகிறது. 


இஸ்லாமிய ஸ்பெனின் எழில் கொஞ்சும் செவில்லோ (إشبيلية: Sevilla)‏ மாநகர் இஸ்லாமிய ஆடையை கழட்டிக் கொண்டது! இணைவைப்பின் ஆடையை அணிந்து கொண்டது! ஒர் கடவுள் வணங்கப்பட ஆலயங்கள் முக்கடவுள் வணங்கப்டும் தேவாலயங்களாக மாற்றப்பட்டன! அதான் ஒலித்த மினாராக்களில் ஆலய மணி ஓசை ஒலித்தது. 


குவாடால்கிவிர் ( نهر الوادي الكبير) நதியின் குமாரி என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட செவில்லா நகரில் ஒரு காலம் அறிவியல் கலைகளும் கட்டிடக் கலைகளும் கொடிகட்டிப் பறந்தன. பனூ அப்பாத் மன்னர்களின் வலிமை மிக்க கோட்டையாக கருதப்பட்டது. பல கவிஞர்களையும் இலக்கியவாதிளையும் பெற்றெடுத்தது. 


ஸ்பானிய மன்னன் மூன்றாம் பெர்னாண்டோ தலைமையில் சிலுவைப் படைகளின் உதவியுடனும் "கிரனாடாவின் இஸ்லாமிய படைகளின் உதவியுடனும்" சிவப்புப் பேனாவால் அடிக்கோடு போட வேண்டிய இடம்) செவில்லே மாநகரின் அனைத்து நுழைவாயில்களும் முற்றுகையிடப்படுகிறது. 


16 மாதங்கள் தொடர்ந்த முற்றுகையின் பின்னர் பசியால் வாடிய செவில்லோ நகர் எதிரியிடம் சரணடைகிறது. இது போன்ற ஒரு நாளில்தான் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பா முழுவதும் ஒளி வீசிய ஒரு ஜோதி அமைதியாக அணைந்து போனது. 


✍ தமிழாக்கம் / imran farook

No comments

Powered by Blogger.