மெத்தியூசிற்கு ஆதரவாக நின்ற வாக்கா யூனிஸ் - பங்களாதேஷ் நீதிமன்றம் தலையீடு
இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மற்றும் அதன் தலைவருக்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் மெத்தியூசின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் அணியின் தலைவர் ஷகிப்பை போட்டி வர்ணனையாளர்கள் விமர்சித்ததிற்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரித்த மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரசல் அர்னால்டுடன் வர்ணனை செய்யும் இடத்தில் இருந்த வாக்கா யூனிஸினால் ஷகிப்பின் கோரிக்கை, இது ஒரு விளையாட்டு வீரரின் நடத்தை அல்ல என கூறிய விமர்சனத்திற்கு எதிராக அந்த நாட்டின் சட்டத்தரணியான ரஹ்மான் கானால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த பங்களாதேஷ் மேல் நீதிமன்ற நீதிபதிகள், அந்நாட்டின் கிரிக்கெட் சபையிடம் இதற்கான விளக்கம் கோரி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Post a Comment