சூப்பிக்கொண்ருக்காமல் இன்றே வெளியேற வேண்டும்
அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருக்காமல் அமைச்சரவையில் இருந்து ரொஷான் ரணசிங்க உடன் வெளியேற வேண்டும் என முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
நானும் அமைச்சரவையில் இருந்துள்ளேன். எனவே, எதாவது செய்வதாக இருந்தால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிவிட்டு செயற்பட்டிருக்க வேண்டும். மரக்கறி சந்தையில் செயற்படுவது போல் அமைச்சரவையில் செயற்பட முடியாது.
தமது வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சருக்கு இடமளிக்கப்படாவிட்டால், அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியேற வேண்டும். எலும்புகளை சூப்பிக்கொண்டு, அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருக்காமல் இன்றே வெளியேற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஐஆர்ஸீ கிங் ரணிலுடன் ஒட்டிக் கொள்ள வழிதேடுவது போல் தென்படுகின்றது. ரணிலை மிக மோசமாக விமர்சித்த நபர்களில் இவர் முதல் தரத்தில் இருக்கின்றார்.
ReplyDelete