Header Ads



கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த ஆசிரியர்கள்


வெலிமடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கடமை நேரத்தில் கஞ்சா புகைத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த ஆசிரியர்கள் சங்கீத வகுப்பறையில் கஞ்சா சுருட்டு புகைத்துக் கொண்டிருந்தபோது அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


தகவலாளரின் தகவலின் பேரில் கைது செய்யப்படும் போது சந்தேகநபர்கள் 1.9 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் அபேவிக்ரமின் தலைமையிலான பொலிஸ் குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

No comments

Powered by Blogger.