குவைத்தில் இருந்தபடி இஸ்ரேலுக்கு ஆதரவளித்த ஒரு தாதிக்கும், மற்றுமொரு தாதியின் குடும்பத்திற்கும் நேர்ந்த கதி
குவைத்தில் உள்ள சபா மருத்துவமனையில் பணிபுரியும் இந்தியா, கேரளா மாநிலத்தை சேர்ந்த செவிலியர் நாடு கடத்தப்பட்டார். செவிலியர் தன்னுடைய வாட்ஸ்-அப் கணக்கில் இஸ்ரேலுக்கு ஆதரவாக தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்கும் பதிவுகளை செய்து வந்தார் என்று குவைத் வழக்கறிஞர் பந்தர் அல் முதைரி புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் மீது உள்துறை அமைச்சகம் நேற்று நடவடிக்கை எடுத்து நாடுகடத்தப்பட்டார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இதே காரணத்திற்காக கடந்த செவ்வாய்கிழமை முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இந்தியா கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவைச் சேர்ந்த செவிலியர் மற்றும் அவரது குடும்பத்தினரை நாட்டை விட்டு வெளியேற உள்துறை உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அவர் குவைத்தை விட்டு வெளியேறிய செய்தி குவைத் மற்றும் இந்தியா ஊடகங்கள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டு இருந்ததது. அவரும் மற்றொரு குவைத் வழக்கறிஞரான அலி ஹபாப் அல் துவைக் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எதிர் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நினைவில் கொள்க, நாம் மற்றொரு நாட்டில் வேலைக்காக வரும் போது அந்த நாட்டின் நிலைப்பாடு மற்றும் சட்ட திட்டங்களை அறிந்து இருக்க வேண்டியது அவசியமாகும். குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தற்போது நடைப்பெற்று வருகின்ற போரில் பாலஸ்தீனத்திற்கு தங்களுடைய ஆதரவு அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களுடைய ஆதரவை அளித்து வருகின்றன.

Post a Comment